மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் சட்டசபை!

kashmir assembly - 2026
#image_title

சிறப்பு அந்தஸ்து: காஷ்மீர் பேரவையில் தீர்மானம்.

  • சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றம். 
  • தீர்மானத்துக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டதால் பேரவையில் அமளி ஏற்பட்டது.
  • ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதில் ஜம்மு – காஷ்மீர் சட்டசபையுடன் கூடியதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டு,  அதில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

இதன் பின்னர் தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின், சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. முன்னதாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவரும், ஏழு முறை எம்.எல்.ஏ.,வுமான அப்துல் ரஹீம் ராத்தர்,  சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில் இன்று ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்தும், அதை மீண்டும் அளிக்கக் கோரியும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  பாஜக., உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆளும் தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏ.,க்கள் எதிர்க் குரல் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. 

கடும் அமளிக்கு மத்தியில் சட்டசபையில், காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனமும் ஏளனமும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories