திரிபுரா முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்பு: அத்வானி, மோடி பங்கேற்பு

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

திரிபுரா முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த பிப்லப் குமார் தேப் வெள்ளிக்கிழமை இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த கால் நூற்றாண்டாக திரிபுரா மாநிலத்தை தன் வசம் வைத்திருந்த இடதுசாரிகளை வெளியேற்றி, பாஜக., முதன்முதலாக வெற்றி பெற்று, திரிபுராவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து பாஜக., சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக பிப்லப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டார்.

48 வயதாகும் பிப்லப் குமார் தேப், திரிபுராவின் கொமோடி நகரைச் சேர்ந்தவர். பிஏ., பட்டம் பெற்றுள்ள பிப்லப், திரிபுரா மாநில பாஜக., தலைவராக 2016 ஜனவரியில் பொறுப்பேற்றார். மிகச் சிறிய வயதில், கட்சியின் சார்பில் மாநிலத் தலைவரான பெருமையைப் பெற்றார். வேறு எந்த மாநிலத்திலும், பாஜக.,வின் மாநிலத் தலைவர்கள் இவ்வளவு சிறு வயதில் பொறுப்பேற்றுக் கொண்டதில்லையாம். தலைமைப் பொறுப்பில் வந்ததும், உடனே ஐபிஎஃப்டி.,யுடன் கூட்டணியைப் பேசி முடித்தார். தொடர்ந்து, பாஜக., சார்பில் அகர்தலாவில் இருந்து 2018 தேர்தலில் வென்று இப்போது மாநிலத்தில் 10ஆவது முதல்வர் ஆகியிருக்கிறார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அகர்தலாவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக பிப்லப் குமார் தேப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜிஸ்ணு தேப் பர்மன் துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., மூத்த தலைவர் அத்வானி, ஜோஷி, முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ram madhav manik - 2026

இந்தப் பதவி ஏற்பு விழாவைப் புறக்கணிப்பதாக, எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. அதற்குக் காரணமாக, அண்மையில் நடைபெற்ற வன்முறைகளைக் குறிப்பிட்டது. ஆனால், தனிப்பட்ட முறையில் அழைத்ததின் பேரில், முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

Related articles

Recent articles

spot_img