
Aatmanirbharta is India’s strength!
PM Modi’s clarion call for a self-reliant maritime ecosystem!
தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்
நண்பர்களே, பாரதம் இன்று, உலகின் நண்பன் என்ற உணர்வோடு, முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகிலே நமக்கு எந்த ஒரு, பெரிய எதிரியும் கிடையாது. இதன் உண்மையான பொருள், நமக்கு இருக்கும்பெரிய எதிரி என்று பார்த்தால், அது என்னவென்றால், மற்ற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கக்கூடிய தன்மை. இதுதான் நம்முடைய மிகப்பெரிய எதிரியாகும்.
நாமனைவரும் இணைந்து, பாரதத்தின் இந்த எதிரியை, சார்ந்திருக்கும் தன்மை, என்ற எதிரியை தோற்கடித்தே ஆக வேண்டும். நாம் இந்த விஷயத்தை, எப்போதும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். எத்தனை அதிகம், அந்நிய நாடுகள் மீது சார்ந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகம், தேசத்தின் தோல்வி. உலகத்திலே, அமைதி, நிலைத்தன்மை, மற்றும் வளமைக்காக, உலகின் மிகப்பெரிய மக்கட்தொகை கொண்ட தேசம், தற்சார்பு உடையதாக, கட்டாயம் ஆக வேண்டும்.
நாம் மற்றவர்களை, சார்ந்திருந்தோம் என்றால், நம்முடைய சுயமரியாதையையும் கூட, இழக்க நேரிடும். 140 கோடி நாட்டுமக்களின் எதிர்காலத்தை, நாம் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது. தேசத்தின் வளர்ச்சி உறுதிப்பாட்டை, மற்றவர்களைச் சார்ந்துவாழும் நிலைக்கு காவு கொடுத்துவிட முடியாது.
நமது வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தை, சடுதியில் விட்டுச் செல்ல முடியாது. ஆகையினால் தான் சகோதர சகோதரிகளே, நாம் குஜராத்தியிலே சொல்லுவோம் இல்லையா? ……………..
100 துக்கங்களுக்கு, ஒரே ஒரு மருந்து தான், அது என்னவென்றால், தற்சார்புடைய பாரதம். தற்சார்புடைய பாரதம். ஆனால் இதற்காக, நாம் சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டும்.
நாம் பிற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கும் நிலைமையை, தொடர்ந்து நாம் குறைத்துக் கொண்டே வர வேண்டும். மேலும், இப்போது பாரதம், தற்சார்புடையதாக ஆகி, உலகத்தின் முன்னால் முழுச்சக்தியோடு, கண்டிப்பாக நிமிர்ந்து நின்றே ஆக வேண்டும்.





