அம்பேத்கர் குறித்த சர்ச்சை டுவீட்: ஹர்திக் பாண்டியா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு

Published:

pandya - 2026

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்டியா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளதை அடுத்து அவர் மீது எம்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்தார். அதில், “எந்த அம்பேத்கர்? அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது நாட்டில் இட ஒதுக்கீடு என்ற நோயை பரப்பியவரா? எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த டூவீட்டுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தனது சமூகத்தினரின் உணர்வுகளை பாண்டியாவின் டுவீட் புண்படுத்திவிட்டதாக டி.ஆர்.மேக்வால் என்பவ்ர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ‘ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் இத்தகைய ட்வீட்டை பதிவு செய்ததன் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை மட்டும் அவமதிக்கவில்லை அவர் சார்ந்த சமூகத்தில் உள்ள மக்களின் உணர்வுகளையும் பாண்டியா அவமதித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த டுவீட் அம்பேத்கரை இழிவு படுத்துவதோடு வெறுப்பை பரப்புவதாகவும் சமூக பிளவு ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாகவும், இதற்காக பாண்டியாவுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ஹர்திக் பாண்டியா மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு ஜோத்பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img