ரூ.100 லஞ்சம் கேட்ட போலீசை முற்றுகையிட்ட காவல்துறையினர்: சென்னை அருகே பரபரப்பு

சற்றுமுன் தமிழகம்

police1 - 2026

போக்குவரத்து காவலர்கள் வாகன ஓட்டிகளிடம் ரூ.100, ரூ.200 என லஞ்சம் கேட்பதாக பல குற்றச்சாட்டுக்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வரும் நிலையில் சென்னை வேளச்சேரி அருகே போக்குவரத்து காவலர்கள் நான்கு பேர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு வாகன ஓட்டியிடம் ரூ.100 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அந்த வாகன ஓட்டி பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து அவரை நான்கு போலிசார் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் போலீசார்களை முற்றுகையிட்டனர்,. ஒருகட்டத்தில் லஞ்சம் கேட்ட போலீசாரை வீடியோ படம் எடுத்த வாகன ஓட்டிகள் உடனே அதை வாட்ஸ் அப்பில் பதிவு செய்தனர்

இந்த வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் கேட்ட காவலர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.