
மர்ம நபர்கள் செயின்பறித்தபோது கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் பாணாவரம் அருகே மர்மநபர்கள் செயின்பறித்தபோது கீழே விழுந்த பெண் சுகாதார ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மல்லிகா, நேற்று முந்தினம் பணிமுடித்து தனது கணவர் வீராசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
மாங்குப்பம் தைலமரத்தோப்பு அருகே சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து மர்ம கும்பல், மல்லிகா அணிந்திருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மல்லிகா தலையில் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சைப் பலினின்றி உயிரிழந்தார்.
செயின்பறிப்பு சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.



