பேஸ்புக்கை ஹேக் செய்தது லிஸார்ட் ஸ்குவாட் பயங்கரவாதிகளாம்!

Published:

Facebook-Icon-300x300செவ்வாய்க்கிழமையான இன்று உலக அளவில் மக்களால் பெரிதும் பயன்படுத்தப் பட்டு வரும் பேஸ்புக்கை சில மணித்துளிகள் பயன்படுத்த இயலாமல் போனது. தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிப் போனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் சேவைகள். பேஸ்புக் பயனாளர்கள், தங்களது கணக்கைத் திறந்து வழக்கம் போல் செயல்பட எவ்வளவோ முயன்றனர். ஆனால் அவர்களால் பேஸ்புக் கணக்கைத் திறக்க முடியவில்லை. பேஸ்புக் கணக்கு செயல்படவில்லை. இந்நிலையில் இந்தப் பிரச்னையை தீர்க்க தீவிரமாக பணியாற்றுவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது. “மன்னிக்கவும், ஏதோ தவறு நடந்துவிட்டது. இதனை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். நாங்கள் எங்களால் முடிந்தவரையில் விரைவில்  சரிசெய்து விடுவோம்,” என்று பேஸ்புக் நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்து இருந்தது. சிறிது நேரம் கழித்து இந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது என்றாலும், பேஸ்புக்கை இணையத்தில் இயங்கிவரும் பயங்கரவாதிகள் ஹேக் செய்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் “பேஸ்புக்கை யார் ஹேக் செய்தது என்று நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம், அது நாங்கள்தான்” என்று லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கிங் குழு டுவிட்டரில் வரிசையாக பதில் கொடுத்தது. இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள இந்த ‘பல்லி படை’ ஏற்கெனவே அமெரிக்காவின் ‘சோனி பிக்சர்ஸ்’ தாக்குதலுக்கும் காரணமாகக் கூறப்பட்டது, இதே ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பல்லி படைதான் நேற்று மலேசிய ஏர் லைன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தையும் ஹேக் செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Related articles

Recent articles

spot_img