கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத்தரவும், மஜதவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கவும் காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக – 106, காங்.,-74, மஜத-40 இடங்களில் முன்னிலையில் உள்ளன. தற்போதைய சூழ்நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்நிலையில், பெங்களூரு சித்தராமையா வீட்டில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முதலமைச்சர் பதவியை குமாரசாமிக்கு விட்டுத்தர காங்கிரஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து இன்று மாலை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் உரிமை கோர திட்டமிட்டுள்ளனர்.



