இந்தியாவின் 11-வது பிரதமரும், கர்நாடக மாநிலத்தின் 14 வது முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவசாயியின் மகனாக பிறந்த தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சமீபத்தில் நிறைவடைந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முக்கிய அணியாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.



