தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்குகிறது

Published:

southeasemansoon - 2026

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்குவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தென்மேற்குப் பருவமழை, கேரளத்தில் அதிகமாக மழைப் பொழிவைத் தரும்.. அடுத்து, கேரளப் பகுதிகளை ஒட்டிய தமிழகத்தின் எல்லை மாவட்டங்களிலும் அப்போது மழை இருக்கும். குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சீசன் தொடங்கும் நேரமும் தென்மேற்குப் பருவ மழையை ஒட்டியே இருக்கும். வழக்கமாக மே மாத இறுதியில், அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். இந்த நிலையில், வரும் மே மாதம் 27ஆம் தேதி கேரளத்தில் பருவமழைக் காலம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது வழக்கமான காலத்தை விட ஓரிரு நாட்கள் முன்னதாகவே தொடங்குவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img