கர்நாடக கர்நாடகா மாநிலத்தின் 24வது முதல்வராக, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் எச்.டி.குமாரசாமி இன்று பதவியேற்கிறார். துணை முதல்வர் பதவி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜி.பரமேஸ்வராவுக்கு வழங்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மே, 17ல், பாரதீய ஜனதா கட்சியின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். கடந்த 19ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு, முன், அவர் ராஜினாமா செய்தார். இதனால், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பில், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர், குமாரசாமியை முதல்வராக பதவி ஏற்கும்படி, கவர்னர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, கர்நாடகா முதல்வராக, குமாரசாமி, இன்று மாலை பதவியேற்கிறார். பெங்களூருவில் நடக்கவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் உட்பட பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் பங்கேற்கின்றனர்.
இன்று முதல்வராக பொறுப்பேற்கிறார் குமாரசாமி
Popular Categories



