பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து இன்றும் உயர்வு!

இந்தியா சற்றுமுன் வணிகம்

cars petrol - 2026

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 11வது நாளாக, பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசு உயர்ந்து, ரூ.80.42க்கு விற்பனையாகிறது.

டீசல் விலை 21 காசு உயர்ந்து ரூ.72.35க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், அனைத்து நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களில் மட்டும் 3 ரூபாய்க்கு மேல் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை, ஆட்டோ, கால் டாக்சி மற்றும் பேருந்து கட்டணங்கள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வால், தமிழக போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களில் பேருந்துப் போக்குவரத்தை படிப்படியாக நிறுத்த யோசித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.