பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பொதுமக்கள் கோபடைந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அவா் பேசுகையில், 2014ம்ஆண்டுக்கு பின்னா் எவ்வித காரணமும் இன்றி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்த்தப்படுகிறது. பண மதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம் நலிந்துள்ளது.
விலை ஏற்றம் செயற்கையானதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. ஏா் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதில் மத்திய அரசிடம் போதிய தெளிவு இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்விற்கு மத்திய அரசின் வரிகளே காரணம். தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வந்தால் விலை குறையும். பா.ஜ.க. மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு என்ன பிரச்சினை உள்ளது? பணவீக்கம் உச்சத்தில் உள்ளது.




Chidambaram and his associates have burried the economy and became fat with many scams. It is surprising that they still continue to comment on this govt without any shame. His son is also involved in a big loot. Let Chida coment about these first.