மக்களவை தேர்தல் வரை, கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “மாநிலத்தில் கூட்டணி அரசு ஸ்திரமாக செயல்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ஒரு வருடம், யாரும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது. முதல்வராக, குறைந்தது ஒராண்டு அல்லது மக்களவை தேர்தல் வரை தொடர்வேன். அதுவரை யாரும் தன்னை அகற்ற முடியாது. அந்த காலகட்டத்தில் சும்மா இருக்காமல், மாநிலத்தின் நலனுக்காக உழைக்க போகிறேன்” என்றார்.




