இந்தியாவில் நாடு முழுவதும் புதிதாக 25 பெட்ரோல் பங்க்குகளை திறக்க அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்து, தினமும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு காலை ஆறு மணி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் பங்க் டீலர்களை நியமனம் செய்யும் வரைமுறை கொள்கையையும் மத்திய எண்ணெய் அமைச்சகம் திரும்ப பெற்றுள்ளது.
இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகளை அமைக்கும் பணிகளில் இனி சுந்த்திரமாக ஈடுபட முடியும். எனவே, இந்தியன் ஆயில், பார்த் பெற்றோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் அடுத்த சில மாதங்களில் புதியதாக 25 ஆயிரம் பெட்ரோல் பங்க்களை திறக்க அனுமதி அளிக்க உள்ளது. புதிய பெட்ரோல் பங்க்கள் திறக்க ஆர்வமுள்ள முகவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.