புதுதில்லி: இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவருக்கு இது 48வது பிறந்த நாள். அதற்காக மோடி உள்ளிட்ட தலைவர்கள் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இனிப்பு வழங்கி ராகுல் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். தில்லி கட்சித் தலைமையகத்தில் மேள தாளத்துடன் கட்சியினர் கொண்டாடினர்.
தனது முப்பது வயதுக்கு மேல், குறிப்பாக 2004 ஆம் ஆண்டு முதல் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கிய ராகுல், இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பணியாற்றி கடந்த 2013இல் கட்சியின் துணை தலைவர் ஆக உயர்ந்து, 2017இல் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார். அவருக்கு இன்று 48 வது பிறந்த நாள். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராகுலுக்கு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் நேரிலும், போனிலும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். கட்சி தலைமையகத்தில் ராகுலுக்கு கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு களை கட்டுகிறது இடம். .
இதனிடையே பிரதமர் மோடி ராகுலுக்கு தனது வாழ்த்துகளை டிவிட்டர் பதிவில் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! அவர் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Birthday greetings to Congress President Shri @RahulGandhi. I pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) June 19, 2018
ராகுலின் பிறந்த நாளை கட்சித் தொண்டர்கள் டிவிட்டரில் #HappyBirthdayRahulGandhi ஹேஷ் டாக் போட்டு கொண்டாடி வருகின்றனர்.




