புள்ளியியல் தினத்தை சிறப்பிக்க இன்று 125 ரூபாய் நாணயம் வெளியீடு

Published:

09 June28 Statisic day - 2026புள்ளியியல் தினத்தை முன்னிட்டு 125 ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று வெளியிட உள்ளார்.

கடந்த 2007ல் ஜூன் 29ம் தேதியை புள்ளியியல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அன்று புள்ளியியலாளர் பி.சி.மஹாலனோபிசின் 125வது பிறந்த நாள் என்பதால் சமூக பொருளாதார திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் மஹாலனோ பிசின் பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.

கடந்த 1931ல் ஐ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை மஹாலனோபிஸ் துவங்கினார். மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட நடைமுறைப்படுத்தல் அமைச்சகம் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனம் சார்பில் இன்று மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாலனோபிசின் 125வது பிறந்த இன்று முன்னிட்டு, 125 மற்றும் ஐந்து ரூபாய் நாணயங்களை வெளியிடுகிறார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img