நெல்லை மாவட்டம் சுரண்டையில் உள்ள காமராஜ் அரசு கலைக் கல்லூரியில் இந்த வருடம் 2018-19 கல்வி ஆண்டில் எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி நுண்ணுயிரியல் பாடப் பிரிவுகள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 26ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப் பட்டு வருகின்றன.
இந்தப் பாடப் பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள், நிரப்பப் பட்ட படிவங்களை வரும் ஜூலை 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் அளிக்க வேண்டும் என்றும், வரும் ஜூலை 12 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.




