ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தை சூறையாடிய வீடியோ ஒன்று சமூகத் தளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.
பொதுக் கூட்டத்துக்கு வந்தாங்களா ? இல்ல கரும்பு திருட வந்தாங்களா? பாவம் அந்த விவசாயி – என்று குறிப்பிட்டு இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தேனி அருகே நடைபெற்ற ஸ்டாலின் வர்றாரு நிகழ்சிக்கு வந்த திமுக தொண்டர்கள் ஒரு கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்து, கரும்புகளை வெட்டி எடுத்து வந்து, மேய்ந்துவிட்டதைக் குறிப்பிட்டு கருத்திட்டு வருகின்றனர் சமூகத் தளங்களில்.