இடிந்து சரிந்த பாலம்; அறுந்து விழுந்த கம்பி; சமயோஜித ரயில் டிரைவரால் காப்பாற்றப்பட்ட பயணிகள்!

Published:

andheri bridge final - 2026

மும்பையில் அந்தேரி பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு மேலே செல்லும் மேம்பாலத்தில் திடீரென நடைபாதைப் பகுதி இடிந்து சரிந்தது. இதில், பாலத்தின் கீழ் செல்லும் ரயில் பாதையில் உள்ள மின் கம்பிகளும் சரிந்து ரயில் பாதையிலேயே விழுந்தன. காலை 7.30க்கு ரயில்வே நிலைய நடைமேடை 7-8க்கு இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

gokhale bridge andheri station collapse western - 2026

எஸ்.வி. சாலையில் உள்ள கோகலே பாலம், அந்தேரி கிழக்கு மற்றும் அந்தேரி மேற்கு ரயில் நிலையங்களை இணைக்கும் மிக முக்கியமான பாலம். தகவல் அறிந்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், உடனடி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார் என்றாலும், மழைக்காலத்தில் மும்பையில் தொடரும் இது போன்ற விபத்துகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மெத்தனமாக இருப்பது தவறு என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

mumbai andheri station gokhale bridge collapse - 2026

கடந்த வருடம் நிகழ்ந்த குறுகிய நடைப் பால விபத்தைப் போல் இந்த ஆண்டு நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், இதைத் தொடர்ந்து ரயில்வே பாதைக்கு மேல் செல்லும் மேம்பாலங்கள், மற்றும் மும்பை மேம்பாலங்கள் திறன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

 

இதனிடையே,  ரயி்ல் டிரைவர் சமயோசிதமாக செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது என்று பாராட்டிய மத்திய அமைச்சர், அவருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி அறிவித்தார்.

mumbai rail driver - 2026

இந்தப் பாலம் இடிந்து விழுவதை, தொலைவிலேயே கவனித்தார் அந்த டிரைவர். உடனடியாக செயல்பட்ட அவர், அவசரகால பிரேக்கை போட்டு, ரயிலை நிறுத்தினார். இதனால் ஏராளமான பயணிகள் உயிர் தப்பித்தனர். மேலும், உயர் மின்னழுத்த கம்பிகள் ரயில் பாதையிலேயே அறுந்து விழுந்தது. இது மட்டும் ரயில் மீது விழுந்திருந்தால், மின்சாரம் பாய்ந்து பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, சமயோசிதமாக செயல்பட்டுரயிலை நிறுத்திய ரயில் டிரைவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

mumbai andheri station gokhale bridge collapse - 2026

மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையில் மும்பை அந்தேரி ரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள மேம்பாலத்தின் நடைப்பாலப் பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தது.  பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, ஈரம் காரணமாக நடை மேம்பாலத்தின் பக்கவாட்டுப் பகுதிகள் வலுவிழந்து இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img