புது தில்லி : உலகின் மிகப் பெரிய மொபைல் தொழிற்சாலை நொய்டாவில் திறக்கப்பட்டது. இந்தத் தொழிற்சாலையை பிரதமர் மோடியும், தென்கொரியா அதிபர் மூன் ஜேயும் கூட்டாகத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்த மோடி, இந்தியாவின் உற்பத்தித் துறையில் இது மிகச் சிறப்பான தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் துறையில் ஒரு கூட்டு ஒப்பந்தமாக இது தயாரிக்கப் படுகிறது என்று குறிப்பிட்டுள்ள மோடி, சாம்சங் இந்தியா குழுவை பாராட்டுவதாகவும் கூறியுள்ளார்.
தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆலை விரிவாக்கத்திற்காக ரூ. 4,915 கோடி ஒதுக்கியது. தற்போது நொய்டாவில் செயல்படும் நிறுவனத்தில், ஆண்டுக்கு 67 மில்லியன் மொபைல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 120 மில்லியன் மொபைல்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, புதிய தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 35 ஏக்கரில் இந்தத் தொழிற்சாலை விரிவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியும், இந்தியா வந்துள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜேயும் இணைந்து இன்று உலகின் மிகப் பெரிய மொபைல் தொழிற்சாலையைத் துவக்கி வைத்தனர்.
A partnership powered by technology and innovation.
President Moon Jae-in and I inaugurated @Samsung_IN’s new production unit in Noida. This is a special moment for India’s manufacturing sector. @moonriver365 @TheBlueHouseENG https://t.co/4un5prlya7 pic.twitter.com/tK6BMPodlA
— Narendra Modi (@narendramodi) July 9, 2018
The importance of digital technology is increasing all over India. At the programme in Noida spoke about how technology is bringing convenience and enhancing transparency. Also talked about the efforts to popularise digital payments across India.
— Narendra Modi (@narendramodi) July 9, 2018




