ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்க நடவடிக்கை

இந்தியா சற்றுமுன்

17 July23 begger - 2026ஹைதராபாத்தின் வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சுமார் 9 ஆயிரம் பேரை பிடித்துச் சென்ற போலீசார், இதில் 3 ஆயிரம் பேரை மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு அவர்களுக்கு கல்வி, உணவு,சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஹைதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக்க தெலுங்கானா அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இந்த நடவடிக்கையின் மூலம் ஏராளமான பிச்சைக்காரர்கள் பெட்ரோல் பங்குகள், தோட்டங்கள், மற்றும் சிறைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.