நடிகையின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் வைத்த ரசிகர்! வைரல் வீடியோ!

Published:

ashika ranghanath - 2026

பிரபல நடிகையை ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடும் வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஆஷிகா ரங்கனாத். மாடலிங் மூலம் தனது கேரியரை தொடங்கிய இவர், கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

2016ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பாய் படத்தில் நடித்தன் மூலம் பிரபலமானார். அடுத்தடுத்து இவர் நடித்த கன்னட படங்கள் வசூலை குவிக்க கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

ashika 2 - 2026

தற்போது கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார் ஆஷிகா ரங்கனாத். 8 படங்களை கை வசம் வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகி வரும் கருடா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கன்னட சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து வருகிறார் ஆஷிகா ரங்கனாத்.

இந்நிலையில் நடிகை ஆஷிகா ரங்கனாத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவர் யாரும் எதிர்பார்க்காத போது ஆஷ்மிகாவின் கையை பிடித்து இழுத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
ashika - 2026

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நடிகைகள் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் போது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அனுமதி இல்லாமல் செல்பி எடுப்பது, ஆட்டோகிராப் பெறுவது என பாடாய் படுத்தி வருகின்றனர். நடிகைகள் என்றால் தொட்டுப் பார்க்கவும் ஆசைப்படுகின்றனர் ரசிகர்கள்.

கண்ட இடங்களில் கையை வைத்து பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துகிறார்கள். ஆஷிகா ரங்கனாத்திடம் அத்து மீறிய ரசிகரை கண்டு பிடித்து அவருக்கு தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை உடனுக்கு உடன் கண்டித்தால் தான் நடிகர் நடிகைகளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

ashika 1 - 2026

முன்னதாக கன்னட சினிமாவின் மற்றும் ஒரு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் பெயர்தான் இந்த விவகாரத்தில் அடிபட்டது. ராஷ்மிகா மந்தனாவைதான் ரசிகர் ஒருவர் கையை பிடித்து இழுத்து முத்தம் கொட்டு ரகளை செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் ராஷ்மிகா அல்ல ஆஷிகா என்பது பின்னர் உறுதியானது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Related articles

Recent articles

spot_img