collector tweet1 - 2026

டிவிட்டர் ஹாக் செய்தவர் கைது. “கிழிச்சுட்ட போ!” என்றது கலெக்டர் அல்லவாம்!

ஒரு ஐஏஎஸ் அதிகாரி, மாவட்ட ஆட்சித் தலைமைப் பொறுப்பில் உள்ளவர் ஒரு நடிகை பதிவேற்றிய புகைப்படங்களைப் பார்த்து “கிழித்துவிட்டாய், போ!” என்று டுவீட் செய்தது வைரலாக மாறியது.

ஆனால் அந்த ட்வீட் நான் செய்யவில்லை என்று கலெக்டர் தெரிவித்தார். தன் டிவீட்டர் அக்கவுண்ட்டை யாரோ ஹாக் செய்துள்ளார்கள் என்றார். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உண்மை என்னவென்று தற்போது தெளிவு கிடைத்து விட்டது.

collector tweet - 2026

நடிகை ரஷ்மிகா பிப்ரவரி பதினெட்டாம் தேதி போட்டோ ஷூட்டில் எடுத்த சில புகைப்படங்களை தன் டிவீட்டரில் போஸ்ட் செய்தார். அவற்றுக்கு ரசிகர்களிடம் இருந்து பலத்த காமெண்டுகள் வந்தன.

தெலங்காணா ஜகித்யால மாவட்ட ஆளுநர் ரவி பெயரில் உள்ள டிவிட்டர் அக்கவுண்டில் இருந்து ஒரு மாதிரியான காமெண்ட் வரவே நெட்டிசன்கள் பிய்த்து உதறி விட்டார்கள்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

ஆனால் அவர் ஹாக் ஆனது என்று கூறிய பேச்சை யாரும் முதலில் நம்பவில்லை. போலீஸ் விசாரணையில் உண்மையாகவே அவர் அக்கவுண்ட் ஹாக் ஆகி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஹாக் செய்தவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அந்த மனிதரும் ஓர் உயரதிகாரியே என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. ஐபி அட்ரஸ் மூலம் போலீசார் அவரை கண்டறிந் தார்கள். அவர் ஜகித்யால மாவட்டத்தையே சேர்ந்த டைரக்டர் ஆஃப் இண்டஸ்ட்ரியல் ஜெனரல் மேனேஜர் சீனிவாஸ் என்று அடையாளம் கண்டார்கள். அவரை கைது செய்து ரிமாண்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அவர் 2018 டிசம்பரிலிருந்து அந்த டவிட்டரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. ” அப்பாடா!” என்று மாவட்ட கலெக்டர் ரவி ஆசுவாசம் அடைந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending