நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சமீபத்தில் நடந்த நெடுஞ்சாலை திறப்பு விழாவில், தனதுபெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்த விவாகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினர், அப்போது மத்தியபிரதேச மாநில முதல்–மந்திரி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர விரும்புவதாக அவர் கூறினார்.
இதற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், ‘‘தான் அந்த சாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டதால், இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்கிறேன் என்றும், அதோடு இந்த சம்பவத்துக்காக எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்தார்.



