சென்னையில் காலமான திமுக., தலைவர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுவது தொடர்பாக பலத்த சர்ச்சைகள் நிலவின. நீதிமன்றம் சென்றது வழக்கு. இறுதியில், கடற்கரையில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்.
ஆனால், கடற்கரை மணலில் சிற்பங்கள் செய்து உலகையே தன் பால் கவர்ந்து வரும் ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக், தமிழ்க் கலைஞர் கருணாநிதிக்கு மிகப் பெரும் கௌரவம் அளித்தார். சிறப்பு தினங்கள் என்றால் ஒடிஸா புரி கடற்கரையில் மணல் சிற்பம் செய்து அசத்தும் சுதர்ஸன், திமுக., தலைவருக்காக மணலில் சிற்பம் வடித்தார்.
மெரினா கடற்கரையில் துயில் கொள்ளப் போகும் திமுக, தலைவருக்கு ஒடிஸாவின் புரி கடற்கரையில் தன் கரத்தால் நினைவிடமாகவே சிற்பம் வடித்தார். அவரது மணல் சிற்பம் பலரையும் வெகுவாகக் கவர்ந்திழுத்தது.
கலைஞர் – ஒரு மேதை என்ற பொருளில் அவர் அமைத்த மணல் சிற்பம் இது…
Tribute to #Kalaignar #Karunanidhi The Legend , My SandArt at Puri beach , #Odisha pic.twitter.com/7RJBIE4Uqa
— Sudarsan Pattnaik (@sudarsansand) August 8, 2018




