கேரள வெள்ளம்… திமுக., மற்றும் நடிகர்கள் நிதி உதவி; பாஜக., உதவி மையம்!

Published:

kerala flood - 2026

சென்னை : தொடர் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சி செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் , திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் பொருட்டு, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார். நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரும் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

தமிழக மக்களும், மக்கள் நீதி மய்ய கட்சி தொண்டர்களும் பாதிப்பிற்குள்ளாகியுள்ள கேரள மக்களைக் காக்கும் பொருட்டு தாமாகவே முன்வந்து நிதியுதவி வழங்க வேண்டும் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தை புரட்டிப் போட்டுள்ள மழை வெள்ளத்தால், வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்துக்கு நிதி உதவி அளிக்குமாறு அம்மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கேரள அரசின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி வழங்கியுள்ளனர். கேரளம் வெகு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என டிவிட்டர் பக்கங்களில் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இதனிடையே, கேரளாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவி புரியும் வகையில் பாஜக., சார்பில் கோவையில் உதவி மையம் அமைக்கப் பட்டுள்ளது. இது குறித்து பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மக்களின் துயரத்திலும், துன்பத்திலும் பாஜக., பங்கெடுக்கிறது. கேரள மக்களுக்கு உதவும் வகையில் உதவி மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை கோட்ட பாஜக., பொறுப்பாளர் செல்வகுமார் பொறுப்பாளராக இருந்து செயல்படுவார். தமிழகம் முழுவதும் இருந்து சகோதர – சகோதரிகள், 86500 20000, 94439 31666 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்களால் இயன்ற உதவிகள், புது துணிகள், போர்வைகள், சமையல் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி உதவி முதல்வரால் தமிழக அரசின் சார்பில் செய்யப் படும் என அரசு அறிவித்தது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img