புதுதில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.
அவர் இது குறித்துக் குறிப்பிடுகையில்…
அவர் ஆட்சி செய்த போது இருமுறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது இருமுறையும் முதலில் என்னை தான் பேச சொன்னார் அரசுக்கு ஆதரவாக!
நான் டில்லி வரும் போதெல்லாம் அவரின் வீட்டிற்கு செல்லாமல் சென்றது கிடையாது.
இன்று அவரின் வளர்ப்பு மகள் நமீதா உன்னையும் என்னையும் அனாதையாக்கி அடல்ஜி சென்று விட்டார் என்ற போது என்னால் என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை… என்னை தன் மகன் போலவே பார்த்தவர்




