ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தப் போட்டி 65 கிலோ எடை பிரிவில் ஜப்பானின் டைச்சியை 11 – 8 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் அணியைச் சேர்ந்த அபூர்வி சந்தேலா – ரவிக்குமார் ஆகியோர் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தனர்.
பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெறுகிறது. இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலும், பலம்பாங் நகரத்திலும் இந்தப் போட்டிகள் ஆகஸ்டு 18 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண், பெண் இணைந்த கலப்புப் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா – ரவிக்குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.




