தமிழக பாஜக., அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் வைக்கப் பட்டுள்ளது. அதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் பூத் தூவி மரியாதை செய்து வருகின்றனர்.
திமுக., சார்பில் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் பாஜக., அலுவலகமான கமலாலயம் வந்து, தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக் கலசம் இன்று பொது அஞ்சலிக்காக பாஜக., தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் வாஜ்பாய் அஸ்தி ஆறு இடங்களில் கரைக்கப்படவுள்ளது.





