மழையால் பாதிக்கப்பட்ட கேரளத்தில், அடுத்த சவாலான பணி, சுத்தம் செய்வதுதான். சேறும் சகதியுமாக பல வீடுகளில் நிரம்பிக் கிடக்கிறது. வெள்ளம் வடிந்த போதும், பலரும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
சேறு நிறைந்த பல வீடுகளில், கட்டடங்களில் விஷப் பூச்சிகள், பாம்புகள் நெளிகின்றன. அவற்றை மிக ஜாக்கிரதையாக அப்புறப் படுத்த வேண்டியிருக்கிறது. இத்தகைய சவாலான வேலையை ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் எதிர்கொண்டு செய்து வருகிறார்கள்.
சென்னை உள்ளிட்ட நகரங்களி இருந்து நிவாரணப் பொருள்களுடன் சுத்தம் செய்யும் பொருள்களையும் அதிகம் சுமந்து சென்றன லாரிகள். விளக்குமாறு, சுத்தம் செய்ய வேதிப் பொருள்கள் என பலவும் கொண்டு செல்லப் பட்டுள்ளன.
இந்நிலையில், செப்டம்பர்- 1ஆம் தேதி கேரளாவின் 14 மாவட்டங்களிலிருந்து 2 லட்சம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான சேவா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதன்படி, கேரளா முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவாகியுள்ளது.





