December 4, 2024, 2:17 PM
31.1 C
Chennai

சபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்!

திருவனந்தபுரம்: சபரிமலை குறித்த விவகாரத்தில், தீர்வு எட்டப்படுவதற்காக கூடிய கூட்டத்தில் சுமுகமான உடன்பாடு ஏதும் ஏற்படாத சூழலில், பந்தளம் ராஜ குடும்பத்தினரும், தந்திரிகளும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.

திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர், பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களயும் அனுமதிப்பது தொடர்பான விவாதம் நடத்தப் பட்டது.

பந்தளம் குடும்பத்தினரும், தந்திரியும் ”உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, உடனே சீராய்வு மனு போட வேண்டும்” என்று கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ஆனால், நீதிமன்றம் விடுமுறை என்பதால் இப்போது போட முடியாது. 22ஆம் தேதிதான் சீராய்வு மனு போடமுடியும்” என்று, தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.

அப்படி எனில் அதுவரை பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்தக்கூடாது!”என பந்தளம் மகாராஜா மற்றும் தந்திரிகள் தரப்பில் கோரினர்.

அதற்கு, ”அதுதொடர்பாக வரும் 19ஆம் தேதி நடக்கும் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யலாம்!” என தலைவர் கூறினார். இதை அடுத்து அரசுத் தரப்பு கூட்டிய இந்த விவாதத்தில் இருந்து தந்திரி மற்றும் ராஜகுடும்பத்தினர் வெளியேறினர்.

ALSO READ:  தெருக்கள் தோறும் கிடைக்கும் கஞ்சா;  மாணவர்களையே முகவராக்கும் அவலம்; அரசுக்கு பொறுப்பு வருமா?

பெண்களை அனுமதிக்கும் ஒரே கொள்கையுடன் அரசுத் தரப்பு இருப்பதாலும், விடாப்பிடியாக எப்படியாவது பெண்கள் அனைவரையும் சபரிமலைக்கு போகச் செய்து, ஐயப்பனின் விரதத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கிவிடுவோம் என்று கம்யூனிஸ்ட் அரசு கேலிப் பார்வையுடன் அணுகுவதாலும், இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் சாதகமாக எடுக்கப்படாது என்றே அனைவரும் கருதினர். அதன்படி, அரசுத் தரப்பு தந்திரிகள் சொல்வதைக் காது கொண்டு கேட்கவே இல்லை என்பதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே தீருவது என்றும் உறுதியுடன் உள்ளதால், கூட்டம் பாதியிலேயே முடிந்தது.