டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக பல விதமான மொபைல் வாலட்டுகளிடையே பணபரிவர்த்தனை செய்து கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போதுள்ளதை விட, அடுத்த 5 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து ஒரு லட்சம் கோடி டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு ஒரு மொபைல் வாலட்டில் இருந்து மற்றொரு நிறுவன வாலட்டிற்கு பண பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பேடிஎம், மொபிக்விக், போன்பே போன்ற நிறுவனங்கள் விருப்பப்பட்டால் மற்ற நிறுவன வாலட்டுகளுக்கு பண பரிவர்த்தனை செய்து கொள்ள பயனாளர்களை அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




