திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலை விவகாரத்தில் அடம்பிடிக்கும் கேரள அரசின் ஹிந்துவிரோதப் போக்கைக் கண்டித்தும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படவுள்ளது.
சபரிமலா கர்மசமிதி என்ற அமைப்பு இதற்கு அறிவிப்பு வெளியிட்டதுடன், மாநிலம் முழுவதும் முழு அடைப்புக்கு ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளது. #Sabarimalawomenentry | #Sabarimala | #Bandh | #Kerala




