அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கு பின், மாலத்தீவுடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அந்நாட்டின் புதிய அதிபர், இப்ராஹிம் இபு சோலிஹின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் மாலத்தீவுக்கு செல்கிறார். தெற்காசிய நாடுகளில், மாலத்தீவுக்கு மட்டும் பிரதமர் மோடி இது வரை சென்றதில்லை. புதிய அதிபரின் அழைப்பை ஏற்று, மாலத்தீவுக்கு செல்லும் பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டு உள்ளார். பிரதமர் மோடி மாலத்தீவுக்கு செல்வதையொட்டி, அங்கு, அதற்கான ஏற்பாடுகளை செய்ய, பிரதமர் அலுவலக அதிகாரிகள் மாலே நகருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Popular Categories




