சத்தீஷ்கர் சட்டசபை தேர்தலையொட்டி இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் ஆகியோர் தீவிர பிசாரம் செய்கின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்திற்கு நவம்பர் 12 மற்றும் 18 ஆகிய இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் இன்று பிரதமர் மோடி, காங். தலைவர் ராகுல் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். இதன்படி பிரதமர் மோடி பஸ்தார் மாவட்டம் ஜக்தல்பூர் உள்ளிட்ட இடங்களில் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் கன்கர் மாவட்டம் பகன்ஜோர், ராஜ்ந்தகோன், கைராக்கார்க், டோங்கார்க் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார்.
Popular Categories




