சபரிமலை ஐயப்பன்கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்தி கர்நாடகா பா.ஜ. தலைவர் எடியூரப்பா யாத்திரை துவக்கினார். சபரிமலை ஐயப்பன்கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடகா மாநில பா.ஜ. தலைவர் எடியூரப்பா சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரியத்தைக் காக்க வலியுறுத்திக் கேரளத்தின் வட மாவட்டமான காசர்கோட்டில் இருந்து எருமேலி வரை ரத யாத்திரை துவக்கினார். இந்த யாத்திரை வரும் 13ஆம் தேதி சபரிமலை அருகே உள்ள எருமேலியில் நிறைவடைகிறது.
Popular Categories




