வாராணசி கோயில் விழாவில் பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சி

வாராணசி: வாராணசியில் உள்ள சங்கடமோசன் கோவில் திருவிழாவில் பாகிஸ்தான் .பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சங்கடமோசன் கோவி்லின் இசை விழா வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தாண்டு முதன் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த கஜல் பாடகர் உஸ்தாத் குலாம் அலி பங்கேற்க உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி குறித்து கோயில் தலைமை குரு விஷ்வாம்பர்நாத் மிஸ்ரா கூறுகையில் , சங்கடமோசன் கோயிலில் முதல் முறையாக பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பணிச் சுமை காரணமாக தன்னால் கோவில் விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார் என்று கூறினார்.