ரூ.13 ஆயிரம் கோடி தேவை… பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் எடப்பாடி கோரிக்கை!

Published:

edappadi modi - 2026பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி வழங்குமாறு வலியுறுத்தியதாகக் கூறப் படுகிறது.

சென்னையில் இருந்து நேற்று மாலை தில்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசித்தார்.

இன்று காலை தில்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப் பட்டது. பின்னர் பிரதமர் இல்லத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, காலை 9.45 மணி அளவில் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார். உடமைகளுக்கும், வேளாண்மைக்கும், மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் ஏற்பட்டுள்ள சேதங்களையும், தமிழக அரசு மேற்கொண்டு வரும் மீட்பு, சீரமைப்பு, நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர், பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.

தமிழகத்துக்கான நிவாரண நிதியாக முதல் கட்டமாக 13 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

மேலும், வர்தா, ஒக்கி புயல் பாதிப்புகளுக்கான நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்குமாறும் மோடியிடம் அவர் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்புமாறு பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி! அப்போது அவர்,

பிரதமர் வீட்டில் நடந்த சந்திப்பின்போது, கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து விளக்கினேன். சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய பேரிடர் ஆய்வுக்குழு விரைந்து தமிழகம் வர கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

gaja relief request - 2026
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கஜா புயல் நிவாரண தொகையாக 14 ஆயிரத்து 910 கோடி வழங்க வேண்டு மென்றும், உடனடியாக 1431 கோடி தேவை என்று வலியுறுத்தி யுள்ளார்.

புயல் பாதிப்பை சரி செய்ய தமிழக அரசுக்கு விரைவாக நிதி ஒதுக்க வேண்டும், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைக்கப் பட்டது.

பிரதமர் மோடியிடம் புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். புயல் நிவாரண நிதிக்கு முதற்கட்டமாக ரூ.1500 கோடி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். கஜா புயல் சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு, பிரதமரிடம் அறிக்கை அளித்துள்ளேன்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

சேத பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவை விரைந்து அனுப்புவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; புயலுக்கு இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

கஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு; அதிமுக அரசை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன!

நிவாரண பணிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர், குறிப்பாக மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர் என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img