ரயிலில் இனி RACக்கு டிக்கெட் உறுதி: புதிய முறை அறிமுகம்!

Published:

IMG 20181203 202850 - 2026ரயிலில் டிக்கெட் புக் செய்யும் போது வைட்டிங் லிஸ்ட்டில் இருப்போருக்கு உடனடியாக பெர்த் வழங்கும் புதிய திட்டத்தை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடைசி நேரங்களில் ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சிலருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் வரும். வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் யாரேனும் தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் பெர்த் வழங்கப்படும். இது RAC எனப்படும். (Reservation against Cancel).

IMG 20181203 202936 - 2026இந்த RAC டிக்கெட்களுக்கு பாதி பெர்த் வழங்கப்பட்டு வருகிறது. பயணம் செய்ய வேண்டிய பயணிகள் வரவில்லையென்றால் தான் முழு பெர்த் வழங்கப்படும். அதற்காக பயணம் செய்ய இருப்பவரின் ஸ்டேஷனில் இருந்து இரண்டு ஸ்டேஷன் வரை டி.டி.ஆர். காத்திருப்பார். ஆனால் தற்போது ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் படி டி.டி.ஆருக்கு கொடுக்கப்படும் மொபைல் போனில் கேன்சல் செய்யப்படும் டிக்கெட் விவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இதனால் உடனடியாக RAC டிக்கெட்டில் இருப்பவர்களுக்கு இனி பெர்த் வசதி கிடைக்கும்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

IMG 20181203 202714 - 2026

 

Related articles

Recent articles

spot_img