அரசு தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமனம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
krishnamurthi subramaniam - 2026

புது தில்லி: இந்தியாவின் தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பாஜக., ஆட்சி அமைந்ததும் தலைமை பொருளாதார ஆலோசகராக கடந்த 2014 ஆம் ஆண்டு அக்.16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்தக் காரணங்கள் என்று கூறி, கடந்த ஜூன் 20ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில்,  கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை இந்தியாவின் தலைமை ஆலோசகர் பதவிக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.