பல்கலை பட்டமளிப்பு மேடையில் திடீரென மயங்கிச் சரிந்த நிதின் கட்கரி!

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம் அஹமது நகர் மாவட்டத்தில் உள்ள விவசாய பல்கலை.,யில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழா துவங்கியதும், மேடையில் நின்று கொண்டிருந்த கட்காரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, அருகில் நின்றிருந்த ஆளுநர் அவரை தாங்கிப் பிடித்தார். தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளிக்கப் பட்டது. அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து, திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும், தற்போது அவர் பூரண நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.