11 June23 Mamtha - 2026

ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எந்த அவசியமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கருணாநிதி சிலைத் திறப்பு தொடர்பாக, திடீரென சென்னைக்கு சோனியாவுடன் வந்தார் ராகுல். காங்கிரஸ் தலைவரான ராகுல் பெயரை சோனியாவின் பெயரில் அழைப்பு அச்சிட்டு, நேரில் தில்லி சென்று அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். இடையே திடீரென சென்னைக்கு தானும் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக அறிவித்தார் ராகுல்.

அப்போதே இதன் பின்னணி அரசியல் குறித்து செய்திகள் வெளியாயின. இந்த நிகழ்ச்சியில் ராகுலை பிரதமர் வேட்பாளராக கூட்டணிக் கட்சியினரின் சார்பில் ஸ்டாலின் முன்மொழியப் போவதாகக் கூறப்பட்டது. அதன்படியே எல்லாம் நடந்தது. ஆனால், அதன் பின்னர்தான் கூட்டணி கலகலத்துப் போனது.

சந்திரபாபு நாயுடு, சரத் பவார், மம்தா பானர்ஜி என கூட்டணியின் ஒருவர் விடாமல் எல்லோருமே அதை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒருபடி மேலே போய், மம்தா பானர்ஜி இதில் தெளிவாக, ராகுல் காந்தியை இப்போதே பிரதமர் வேட்பாளராக அறிவிக்க என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை அகற்ற ஓர் அணியில் ஒருங்கிணைந்துள்ளோம்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

யாரும் தனியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது, எல்லோரும் சேர்ந்து ஒரே முடிவை எடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஸ்டாலின் எடுத்த தனிநபர் முடிவுக்கு மம்தா பானர்ஜி அளித்துள்ள பதில் இது என்று பார்க்கப் படுகிறது.

One response to “ஸ்டாலினின் யதேச்சாதிகார முடிவுக்கு மம்தா பானர்ஜி ‘சுளீர்’ சவுக்கடி!”

  1. இது தமிழ் நாட்டுக்கு மட்டுமே உண்டான strategy

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending