கோலி சதம், தோனி அரை சதம்… இந்தியா வெற்றி!

Published:

cricket aus ind oneday - 2026

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கிய பின்ச் 6 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்னிலும், கவாஜா 21 ரன்னிலும் வெளியேறினார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 20 ரன்னில் அவுட் ஆனார். ஸ்டாய்னிஸ் 29 அவுட்டானார்.

ஷான் மார்ஷ் அபாரமாக ஆடி சதமடித்தார். இவருக்கு மேக்ஸ்வெல் ஒத்துழைத்தார். மேக்ஸ்வெல் 48 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய ஷான் மார்ஷ் 131 ரன்களில் அவுட்டானார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும், முகமது ஷமி 3 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

தொடர்ந்து 299 ரன் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்தியா தனது பேட்டிங்கை தொடங்கியது!

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 52 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் இதில் இரண்டு பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும் அவருக்கு ஜோடியாக களமிறங்கிய ஷிகர் தவான் 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் கேப்டன் விராட் கோலி தனது அருமையான இன்னிங்சை விளையாடினார். அவர் 112 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார் இதில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும் அவர் 104 ரன்களில் அவுட்டானார்

அம்பத்தி ராயுடு தன் பங்குக்கு 24 எடுத்தார் இந்நிலையில் 5வது விக்கெட்டுக்கு தோனியும் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அருமையாக விளையாடினர், தோனி 54 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர்கள் அடங்கும். தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு 14 பந்துகளில் 25 ரன்கள் முக்கியமான கட்டத்தில் எடுத்து கைகொடுத்தார்

இதன் மூலம் இந்திய அணி 49.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை இந்திய அணி பெற்றது !

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது இதன் மூலம் இந்த தொடரில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன

Related articles

Recent articles

spot_img