மோடி- மேக் இன் இந்தியா! ராகுல் – பிரேக் இன் இந்தியா!

Published:

07 June24 Amith shah - 2026

இமாச்சல பிரதேசத்தின் உனாவ் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசினார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா! அப்போது அவர், ஒரே தகுதி ஒரே ஓய்வூதியத்தைக் குறிக்கும் OROP என்பது, ஒன்லி ராகுல், ஒன்லி பிரியங்கா என்று ஆகிவிட்டது என்று கேலி செய்தார்.

55 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த போதும் காங்கிரஸ் வறுமையை ஒழிக்கவில்லை, ஆனால் ராகுல் இப்போதும் வறுமையை ஒழிப்பதாகக் கூறுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, ராணுவ வீரர்கள் பயன்பெறுவதற்காக ஒன் ரேங்க் ஒன் பென்சன் என்று குறிப்பிடப்படும் OROP திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸோ, Only Rahul, Only Priyanka என OROP திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது என்று கூறி, காங்கிரஸின் குடும்ப ஆட்சி முறையை வெளிப்படையாகச் சொல்லாமல் விமர்சித்தார்.

பிரதமர் மோடியோ மேக் இன் இந்தியா திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுகிறார். ஆனால் ராகுலோ பிரேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்த முனைகிறார்… என்று பேசினார் அமித் ஷா.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

Related articles

Recent articles

spot_img