குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி ஆண்டுவிழாவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல் வீடியோ

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பராசக்தி மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் எதூசியா 2018 எனும் தலைப்பில் கல்லூரி மாணவிகளுக்கான கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டி,அறிவுச்சார் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிகள், கட்டுரை போட்டிகள்,உள்ளிட்டவைகள் கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தலைமையில் நடைபெற்றது.

ஆங்கிலத்துறை தலைவர் ராதா அனைவரையும் வரவேற்று பேசினார். கலைநிகழ்ச்சிகள் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரிகளைசார்ந்த மாணவிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டு தங்களது குழுவின் சார்பில் தங்களது திறனை வெளிப்படுத்தினார்.

முடிவில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.