இன்று தாக்கலாகிறது குடியுரிமை மசோதா! மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவு!

இந்தியா சற்றுமுன்
PARLIAMENT - 2026

நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவையில் இன்று குடியுரிமை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. நேற்றே தாக்கலாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தாக்கலாகிறது இந்த மசோதா.

இதை அடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் சில பிரிவினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுக்குள் அகதியராக வந்த அந்நாடுகளின் சிறுபான்மையினரான ஹிந்துக்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்டோர் 6 வருடங்கள் தொடர்ந்து இங்கே தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. முன்னர் இது 12 வருடங்களாக இருந்தது.

இந்நிலையில் இந்தக் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கில் போராட்டங்கள் நடக்கின்றன. இதனால் இன்று மணிப்பூர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.