பாகிஸ்தான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்!: மனம் குமுறிய மோடி!

Published:

modi open - 2026

பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  மேலும்,  பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறினார் பிரதமர் மோடி.

பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தி இருத்கக்கூடாது. இந்தச் செயலுக்கு உரிய தண்டனை கண்டிப்பாக கொடுக்கப்படும்.  பாகிஸ்தான் மிகப்பெரிய தவறை செய்துள்ளது. சதி செய்து இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நனவாகாது. இந்தியாவின் நிலைத்தன்மையை இதுபோன்ற தாக்குதல்கள் பாதிக்காது. பயங்கரவாதிகளின் தாக்குதலைப்பார்த்து இந்தியா உறைந்துபோய்விடாது… என்று கூறினார்.

தில்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதன் பின்னர் விழாவில் பேசிய மோடி, புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி. ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்தச் சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றாக நிற்கிறது. மக்கள் தற்போது மிகவும் கோபமாக உள்ளனர். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்து போய் உள்ளது.

இந்தச் செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது. இதற்கு மிகப் பெரிய விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும். இனி பாகிஸ்தான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியே அடையும். இந்தியாவின் நிலைத்தன்மையை இது போன்ற தாக்குதல்கள் பாதிக்காது.

எதிர்க்கட்சிகள் இந்தத் தாக்குதலை அரசியல் ஆக்க வேண்டாம். வேற்றுமையை மறந்து பயங்கரவாதிகளை ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. சதி செய்து இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று பேசினார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img