பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிட்டு பலுசிஸ்தான் தூதரகத்தை திறக்கவும்! : சுப்பிரமணியன் சுவாமி யோசனை!

Published:

subramanian swami4 - 2026இன்றே பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிடவும் என்று யோசனை கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தார்.

இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாஜக., மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி டிவிட்டர் பதிவுகளில் வரிசையாக தனது கருத்துகளைப் பதிவுசெய்து வந்தார்.

பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை துண்டிக்க வேண்டும் என்று வெகுநாட்களாக கோரிக்கை வைத்தவர் சு.சுவாமி. மேலும், பாகிஸ்தானுக்கான தாராள வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை நீக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை, இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர்தான் மத்திய அரசு செவிமடுத்து அறிவித்துள்ளது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

நாடு பேசுகிறது. பழிவாங்கலுக்கு அல்ல, பதிலடி கொடுக்க! ஒன்றுக்கு ஒன்றாக அல்ல, எதிர்கால நலன் கருதி ஒட்டுமொத்தமாக!  இப்போது நாம் வேறு வகையில் சிந்திக்க வேண்டும். தில்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தைத் திறக்கவேண்டும்! பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிடுங்கள்! என்று கூறியுள்ளார் சுவாமி.

மேலும், வர்த்தக நாட்டுக்கான அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளீர்கள் நன்றி. இப்போது பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று இந்தியா அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்! இப்போதே இப்போதே… இப்போதே! நாளை அல்ல! இன்று! என்று கூறி ஒரு கருத்தை ரிடிவீட் செய்து, அதை பலருக்கும் டேக் செய்திருக்கிறார் சுவாமி!

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img