பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் தொடங்கி நாடு முழுதும் ஆர்ப்பாட்டம்!

இந்தியா சற்றுமுன்

protest against kashmir incident - 2026

புது தில்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்ஸ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, காஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ளூர் மக்கள், மாணவர்கள், பல்வேறு
அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்கள் கைகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி சாலையில் அமர்ந்து போராடினர். மேலும், பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி, தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் பாகிஸ்தான் அரசைக் கண்டித்தும், ஜெய்ஸ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

மேலும் பாகிஸ்தான் தேசியக் கொடி, ஜெய்ஸ் இ மொஹம்மத் இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் உருவபொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்தனர்.

இதேபோல், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், தெலங்கானா மாநில உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.